ஒகேனக்கல் : நீர்வரத்து 8,000-ம் கனஅடியாக சரிவு
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு எட்டாயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு எட்டாயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த திங்கட் கிழமை நான்காயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து எட்டாயிரத்து 900-ம் கனஅடியாக இருந்தது. திடீரென சரிந்து தற்போது எட்டாயிரம் கனஅடியாக உள்ளது. தொடர்ந்து, பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.