"எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க சட்டம் தேவை" - புகழேந்தி

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-28 06:47 GMT
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தால், அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத அளவுக்கு புதிய சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும் என்று அ.ம.மு.க. செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நல்லூரில் தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு முறை ஒரு கட்சியின் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்த காரணத்தை கொண்டும் அவர்கள் ராஜினாமா கொடுக்க கூடாது என்றும் புகழேந்தி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்