காவிரி நதி நீர் மீதான தமிழகத்தின் உரிமை - அ.தி.மு.க அரசுக்கு அக்கறை இல்லை - மணியரசன் குற்றச்சாட்டு

காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை மத்திய பா.ஜ.க. அரசும் மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் பெற்றுத் தரவில்லை என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2019-07-27 23:07 GMT
காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் பெற்றுத் தரவில்லை என காவிரி உரிமை மீட்புக்குழு தலைவர் மணியரசன் குற்றம்சாட்டி உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மண்ணின் மைந்தர்கள்  அமைப்பு சார்பில் தழைக்கட்டும் தலைமுறை என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய மணியரசன், தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் ஜனநாயக ஆட்சியை விட, அன்றைக்கு இருந்த மன்னர் ஆட்சி பல வகையிலும் மேலானது என்று தெரிவித்தார். நம்மை அடிமைப்படுத்த வந்த வெள்ளைக்கார அரசுக்கு காவிரி நீர் மீது இருந்த அக்கறை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகளுக்கு இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்