புதிய மாவட்டங்கள் தென்காசி,செங்கல்பட்டுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

Update: 2019-07-27 03:04 GMT
தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. தென்காசி மற்றும் செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு ஜான் லூயிஸ்  மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அருண் சுந்தர் தயாளன்  ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்