அபிராமி என்ற திருநங்கை கொலை வழக்கில் 6 பேர் கைது
விழுப்புரத்தில் அபிராமி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில்,3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
விழுப்புரத்தில் அபிராமி என்ற திருநங்கை கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 திருநங்கைகள் உள்பட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். அய்யங்கோவில்பட்டு பகுதியை சேர்ந்த திருநங்கை அபிராமி, கடந்த 17-ஆம் தேதி விழுப்புரம் புறவழிச்சாலை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அபிராமியை முன்விரோதம் காரணமாக தேனியை சேர்ந்த திருநங்கை புனிதா, நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து திருநங்கை புனிதா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். கொலை சம்பம் குறித்து பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், திருநங்கைகள் பாலியல் தொழில் மற்றும் சாலையில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.