ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மரங்களை அழிப்பதா? : சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு

சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-07-25 03:24 GMT
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக  மரங்களை வெட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோட்டை பகுதியில் உள்ள பழைய மாநகராட்சி பிரசவம் மருத்துவமனையை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அங்கு நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இருபதுக்கு மேற்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அப்பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்