நீர் கசியாத சுவர்கள்... வாகனங்கள் செல்லும் வசதி - ரூ.387.60 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி
நீர் கசியாத பக்கவாட்டு சுவர்கள், வாகனங்கள் செல்லும் வசதியுடன் முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நீர் கசியாத பக்கவாட்டு சுவர்கள், வாகனங்கள் செல்லும் வசதியுடன் முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 387 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில், தென் பகுதியில் 45 மதகுகள், வட பகுதியில் 10 மதகுகளுடன் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நீர் கசியாத தொழில்நுட்பத்துடன் சுவர்களும், மேலணை மேல் வாகனங்கள் செல்லும் வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மார்ச் 2021 க்குள் இந்த பணிகள் நிறைவடையும் என திட்டமிடப்பட்டுள்ளது.