"நீட் தேர்வு கூடாது என்பது தான் அரசின் கொள்கை" - அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தமிழகத்தில் கூடாது என்பது தான் அரசின் கொள்கையாக உள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் 3 ஆயிரத்து 491 பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் ,ஜெயகுமார் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்று வெளியான செய்தி தவறு என்றார். எத்தனை மாணவர்கள் தேர்வானார்கள் என்ற பட்டியலை விரைவில் வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையில் அரசுக்கு ஒரே நிலைப்பாடு தான் என்று குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டதாக கூறினார்.