மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான்... ரூ.18 லட்சம் நிதி திரட்டல்
சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நோக்கில் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இந்த போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, 18 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உடல் உறுப்புகள் வழங்கப்பட உள்ளது. 21 கிலோ மீட்டர் பந்தய தொலைவாக கொண்ட இந்த மராத்தான் போட்டி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. மயிலாப்பூர் எம்.எல்.ஏ, ஆர்.நடராஜன், போட்டியை தொடங்கி வைத்தார். ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மராத்தான் பந்தயத்திலும் கலந்துகொண்டார்.