அத்திவரதர் கோயிலில் துர்நாற்றம் - பக்தர்கள் வேதனை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து பக்தர்களும் வரிசையில் காத்திருப்பதால் வியர்வை நாற்றம் மற்றும் காற்றோட்டம் அதிகம் இல்லாத காரணமாக அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக கூறும் பக்தர்கள், துர்நாற்றம் வீசுவதை தடுத்து, தொற்று நோய் எதுவும் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.