"உயர் கல்வி நிறுவனங்களில், தீண்டாமை குற்றங்கள்" என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- கனிமொழி
உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
உயர்கல்வி நிறுவனங்களில் எழும் தீண்டாமை குற்ற புகார்கள் குறித்து அந்த நிறுவனங்களே பார்த்துக்கொள்ளும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, உயர் கல்வி நிறுவனங்களில் பட்டியல், பழங்குடி பிரிவு மாணவர்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் குறித்த புகார்களை விசாரிக்க தனி குழுவோ, தனிப் பிரிவோ ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல்கலைக் கழக மானியக் குழுவே அதை பார்த்துக்கொள்ளும் என்றார்.