செங்கம் அருகே நரிக்குறவர்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
செங்கம் அருகே ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில், நரிக்குறவர் குடியிருப்பு வீடுகளை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில், நரிக்குறவர் குடியிருப்பு வீடுகளை கட்டுவதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி துவக்கி வைத்தார். இப்பகுதியில் சுமார் 100 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், 84 பயனாளிகளுக்கு குடியிருப்புகள், கட்டுவதற்கான, ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.பின்னர், நரிக்குறவர் இன மக்களிடம் ஒன்றாக அமர்ந்து பாரம்பரிய மணி கட்டும் தொழிலை கேட்டறிந்து, மணிகளை கோர்த்து வியப்பில் ஆழ்த்தினார்.விழாவில் நரிக்குறவ இன மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தங்களது பாரம்பரிய மணிகளை மாலையாக அணிவித்து மகிழ்வித்தனர்.