"நீட் தேர்வு - திமுக மீது பழி போடுவதா?" - ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் திமுக மீது பழிபோடுவதை அதிமுக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-07-12 11:06 GMT
திமுக ஆட்சியின் போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடை பெறப்பட்டதாகவும், தி.மு.க. ஆட்சி இருந்தவரை  நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஆனால் பாஜக மற்றும் அதிமுக ஆட்சியில் நீட் தேர்வை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணை நடைபெறும் முன்பே நீட் தேர்வு தொடர்பான தீர்ப்பு திரும்ப பெறப்பட்டு தமிழக மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற முடியாமல் போன வரலாற்று பிழையை மறைக்க  திமுக மீது மீண்டும் மீண்டும் பழிபோடுவதை அதிமுக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்