கடனை செலுத்தாததால் வீடு ஜப்தி நடவடிக்கை : அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்த தாசில்தாரின் மனிதாபிமானம்
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் தாசில்தாரின் மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
திருப்பதிசாரம் பூங்கா நகரை சேர்ந்தவர் கண்ணன், தொழில் முன்னேற்றத்திற்காக வங்கியில் கடந்த 2014 ஆம் ஆண்டு 17 லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கண்ணன் விபத்தில் சிக்கி கொண்டதால் கடன் தொகையை சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் வருவாய்துறை அதிகாரிகளுடன் வருகை தந்திருந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்ணனின் மனைவி மற்றும் குழந்தைகள் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனை பார்த்ததும் ஜப்தி நடவடிக்கையை கைவிடும் படி தாசில்தார் தடுத்து நிறுத்தியுள்ளார். ஜப்தி செய்யவிடும்படி வங்கி அதிகாரி ஒருவர் தாசில்தாரின் கையை பிடித்து இழுத்துள்ளார், இன்னொருவர் தாசில்தாரின் காலில் விழுந்து அழுததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உயிர்களே முக்கியம் என்று கூறி ஜப்தி நடவடிக்கையை தாசில்தார் கைவிட்டார்.