சாதிச் சான்று கேட்டு, மாணவர்கள் சாலை மறியல்
கிள்ளை பகுதியில் சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பள்ளிச் சீருடையுடன் வந்த இருளர் சமுதாய மாணவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் சாதிச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பள்ளிச் சீருடையுடன் வந்த இருளர் சமுதாய மாணவர்கள், பெற்றோருடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் பயின்று வருவதாகவும், சாதிச் சான்று இல்லாமல் 10ஆம் வகுப்புக்கு மேல் செல்வதில், சிக்கல் இருப்பதாகவும் கூறி கிள்ளையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அவர்கள் முழக்கம் எழுப்பினர்.சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் தாசில்தார், சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.