நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் வெகு விமர்சயைாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் உள்ளிட் 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது, தேர் 4 மாட வீதிகளையும் வலம் வர பக்தர்கள் நம்ச்சிவாய என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னீட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோலமிட்டு நடனம் ஆடியபடி வந்தனர்.