ஜி.எஸ்.டி வரி குறைப்பு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் : திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் கருத்து
பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததது ஏமாற்றம் அளிப்பதாக, திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட்டில் ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததது ஏமாற்றம் அளிப்பதாக, திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அந்த சங்க தலைவர் ராஜா எம். சண்முகம் கூறுகையில், பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்கள் மீண்டு வருவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். முன்பு 250 கோடி ரூபாய் வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரை, வரி தள்ளுபடி இருந்ததாகவும், தற்போது அது 400 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னலாடை துறைக்கு பட்ஜெட்டில் போதிய முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.