சென்னையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் : வேலைவாய்ப்புகளை பெருக்கும் பட்ஜெட் என கருத்து

சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-05 21:17 GMT
சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் மத்திய பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய வருவாய்த்துறை செயலாளர் சிவராமன், பட்ஜெட் வேலைவாய்ப்புகள் பெருகக் கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும், அடித்தட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதேவேளையில் ரயில்வேக்கு அதிக முக்கியதுவம் இல்லை என்றும்,   தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். பல திட்டங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்