கட்டாய ஹெல்மெட் சட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தெரிந்துகொள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-05 18:41 GMT
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ​தொடரப்பட்ட பொதுநல மனுவை, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது, இருசக்கர வாகனங்களில் பின் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், போக்குவரத்து காவல் துறையினர் கண்காணிப்பு கேமரா முன் நின்று, விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பார்களா என கேள்வி எழுப்பினர்.  மேலும், ஹெல்மெட் அணிவோரின் எண்ணிக்கை, விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்