அத்தி வரதர் உற்சவத்தின் நான்காம் நாள் - வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 4ஆம் நாளான இன்றைய தினம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

Update: 2019-07-04 06:47 GMT
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 4ஆம் நாளான இன்றைய தினம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.  அத்திவரதருக்கு திருவாராதனம் செய்து, வெண்பட்டு உடுத்தி, மலர்மாலை அணிவித்து, நெய் வேத்தியம் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை வழிபட்டு வருகின்றனர். வரதராஜபெருமாள் கோயில் ஆனி உற்சவம் இன்று முதல் வருகிற 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்