குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை - தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை முதலிடம்
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு குறித்த கண்காட்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.
தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவ மனையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், குடும்ப கட்டுப்பாடு குறித்த கண்காட்சியை மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில், தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனை ஏழாவது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.