மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 ஆவது பெரிய ஏரியாகிய மதுராந்தகம் ஏரி, 2 ஆயிரத்து 846 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சுற்றி 5 மீட்டர் உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப கோரி வழக்கறிஞர் நிர்மல்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.