வாகன சோதனையின் போது போலீசாரிடம் வாக்குவாதம் : சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பம்
சென்னை மெரினா கடற்கரை அருகே வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஒரு குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மெரினா கடற்கரை அருகே வாகன சோதனையின் போது போலீசாரிடம் ஏற்பட்ட தகராறின் காரணமாக ஒரு குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா கடற்கரை சாலையில் இருந்து பட்டினப்பாக்கம் தினகரன் சாலை வழியாக காரில் ஒரு குடும்பத்தினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அபிராமபுரம் காவல் உதவி ஆய்வாளர் காரை நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதில் அந்த குடும்பத்தினருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த குடும்பத்தினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.