4 சக்கரங்களுடன் இயக்கப்பட்ட அரசு பேருந்து

பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-01 09:40 GMT
பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் சென்ற  அரசு பேருந்தில் ஆறு சக்கரங்களுக்கு பதிலாக நான்கு சக்கரங்கள் மட்டும் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி சமுக வலைதளங்களில் பரவி  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் போக்குவரத்து கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்து ரூபாய் நாணயம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாட்ஸ் அப்பில் பரவியதால் கிளை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த டெப்போவை சேர்ந்த அரசு பேருந்து 4 சக்கரங்களுடன் இயக்கப்படுவது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்