குன்னூரில் களை கட்டியது பேரிக்காய் சீசன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், பேரிக்காய் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது.

Update: 2019-06-27 10:58 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில், பேரிக்காய் சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்காவை ஒட்டி, சுமார் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பழத்தோட்டத்தில், பேரிக்காய், பிளம்ஸ், பீச், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்ட பழ மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, பேரிக்காய் சீசன் துவங்கி உள்ள நிலையில், மரங்களில் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளது. இன்னும் சில நாட்களில், அறுவடைக்கு தயாராக உள்ள பேரிக்காய்களை வாங்குவதற்கு, சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளும், ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்