"மக்களை சமாதானப்படுத்த ஸ்டெர்லைட் ஆலை மூடல்" - வேதாந்தா நிறுவனம்
மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனுவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் விளக்கமளித்து மனுத் தாக்கல் செய்துள்ளது.அதில், ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும்ஆலையை மூடிய பிறகு, காற்று, தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து ஆலையை மூட அரசு உத்தரவிட்டதாக வேதாந்தா நிறுவனம் குற்றம்சாட்டி உள்ளது.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு, மக்களை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும்ஆலையை மீண்டும் திறக்க ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் வேதாந்தா நிறுவனம் அந்த விளக்க மனுவில் தெரிவித்துள்ளது.இந்த வழக்கு இன்று நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.