திமுக ஆட்சிக்கு பிறகு தமிழகத்தின் சரிவு தொடக்கம் - எச். ராஜா

திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்துதான் தமிழகத்தின் சரிவு தொடங்கியதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார்.

Update: 2019-06-23 17:01 GMT
திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்துதான் தமிழகத்தின் சரிவு தொடங்கியதாக பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்மாய்களையும்,  புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமிப்பது தான் திமுகவின் பாரம்பரியம் என்று தெரிவித்தார். ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு போனால் போராட்டம் வெடிக்கும் என்று கூறும்  துரைமுருகன், இந்த அளவு மனிதாபிமானம் இல்லாமல் இருப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்