டெட் எழுதிய அனைவருக்கும் பணி வழங்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணி விரைவில் நிறைவடையும் என்று தெரிவித்தார். கோவை, நீலகிரி இடையே விரைவில் 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், மரம் வளர்த்தால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார். டெட் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி வழங்க இயலாது என்று குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் , காலிப்பணியிடங்களுக்கு ஏற்றவாறு மட்டுமே பணி வழங்க முடியும் என்றார்.