மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-06-21 09:14 GMT
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாடு போன்ற வறட்சியான மாநிலங்களில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் மற்றும் வறட்சியை சமாளிக்க பிரதம மந்திரி கிறிஸ் பஞ்சாயதன திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு சிறப்பு நிதி தொகுப்பாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காவிரி இணைப்பு திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் வலியுறுத்தினார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் வருமானம் வழங்கும் திட்டத்தை விவசாய கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனவும் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். புயல் பாதித்த மாவட்டங்களில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு லட்சம் வீடுகள் கட்ட  6ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என துணை முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்