வரும் 28-ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்குவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

Update: 2019-06-20 08:00 GMT
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி கூடியது. 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பிப்ரவரி 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றதை தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வரும் 28ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். பேரவை கூடும் நாளில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும் என்றும், அன்றைய தினம் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி அவையை எத்தனை நாட்களுக்கு கூட்டுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.  இந்த கூட்டத்தொடரில் தண்ணீர் பிரச்சினை, உள்ளாட்சி தேர்தல் என பல முக்கிய விவகாரங்கள் குறித்த காரசாரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்