குடும்ப பிரச்னை - மரத்தின் உச்சியில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

திண்டுக்கல்லில் மரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-16 20:53 GMT
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தன பாண்டி. சுமை தூக்கும் தொழிலாளியான இவர் மனைவி மகேஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சிறுமலையில் வசித்து வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்த தன பாண்டி, திடீரென அங்குள்ள அரசுப் பள்ளியில் உள்ள மரத்தின் உச்சிக்கு ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூச்சல் போட்டார். தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தன பாண்டியை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் நீண்ட நேரமாக அவர் கீழே இறங்க மறுத்ததுடன்,  மரக் கிளைகளுக்கு இடையே தாவி சென்றபடி இருந்தார். அப்போது தனபாண்டிக்கு எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு ரத்தம் வெளியேறியது. இதையடுத்து அவருடன் பணிபுரியும் சிலரின் வற்புறுத்தலின் பேரில் மரத்தில் இருந்து இறங்கி வந்த தனபாண்டியை108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் தனபாண்டியிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையால் மன உளைச்சல் ஏற்பட்டு மதுபோதையில் மரத்தின் ஏறி தனபாண்டி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது-
Tags:    

மேலும் செய்திகள்