தூத்துக்குடி : வைகாசி மாத கடைசி பிரதோஷம் - நந்திக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம்
தூத்துக்குடி சிவன் கோவிலில், வைகாசி மாத கடைசி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி சிவன் கோவிலில், வைகாசி மாத கடைசி பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றதுடன் நந்திக்கு பால், தயிர் , வெண்ணெய், சந்தனம் போன்ற 9 வகை திரவியங்களால் அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றது.
சங்கல்தோப்பு தர்கா உரூஸ் திருவிழா : சந்தனக்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள சங்கல்தோப்பு தர்காவில், உரூஸ் திருவிழா, அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி கோட்டையில் இருந்து பைதுல்மால் மாவட்ட தலைவர் நவாப் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட குதிரை சாரட் வண்டியில், சந்தனகுடம் ஏற்றி நடமாடும் இன்னிசை குழுவினருடன் ஊர்வலம் புறப்பட்டது.
திருவண்ணாமலை : ஒரே நேரத்தில் 4 கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே நேரத்தில் நான்கு கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வர சித்தி விநாயகர், செல்வ மாரியப்பன், பொன்னியம்மன் மற்றும் ராமர் பஜனை கோயில் உள்ளிட்ட நான்கு கோயில்களில் யாகசாலை பூஜை நடத்தப்பட்டது. பின்னர், மேள - தாளங்களுடன் எடுத்துவரப்பட்ட புனித நீரானது கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.