குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரி தென்சென்னை எம்.பி. தமிழச்சி மனு
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தென்சென்னை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கு நிர்வாக இயக்குநர் ஹரிஹரனை சந்தித்து மனு ஒன்றையும் அளித்தார். தென்சென்னை தொகுதியில் சாலை மற்றும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவும் கேட்டுக்கொண்டதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்தார்.