அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு உள்ளன - தமிழிசை
தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்ததன் மூலம் அதிமுக-பாஜக நட்புறவை புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அனைத்து நேரங்களிலும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும், மத்திய மாநில அரசுகள் நட்புறவோடு இருக்கும் காரணத்தால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.எல்லோரும் மதிக்கும் தமிழக வரலாற்றை திரித்து நாகரிகமற்ற முறையில் கூறுவது தவறு என்று கூறிய தமிழிசை, வரலாற்று ஆதாரம் இல்லாமல் பிரிவினை ஏற்படுத்துவதை போல பேசுவதை சிலர் நிறுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.