முதுமலையில் கனமழை - மாயாற்றில் வெள்ளப் பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, கூடலூர், தேவாலா, நடுவட்டம், ஊட்டி பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-06-13 01:34 GMT
நீலகிரி மாவட்டத்தில், முதுமலை, கூடலூர், தேவாலா, நடுவட்டம், ஊட்டி  பகுதிகளில் கடந்த 8 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.  இதனால் முதுமலை சரணாலயம் நடுவே ஓடும் மாயார் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுலா பயணிகள் ஆற்றின் கரை பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். முதுமலை சரணாலயத்தில் உள்ள ஏரி, குளம்  நிரம்பி இருப்பதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு நீங்கி உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால் முதுமலை புலிகள் காப்பகம் பசுமையாக காட்சியளிக்கின்றது.
Tags:    

மேலும் செய்திகள்