சிதம்பரம் பகுதியில் 14 இடங்களில் ஓ.என்.ஜி.சி. கிணறு : ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரியில் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரியில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரன், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், 67 இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க முடிவு செய்து, தற்போது 14 இடங்களை கண்டறிந்து உள்ளதாக கூறினார். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.