ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வழக்கு : விசாரணையில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-11 18:03 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்தது. தற்போது, நீதிபதி சத்தியநாராயணன் மதுரை கிளையில் உள்ளதால், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இருந்தபோது, ஸ்டெர்லைட் தொடர்பாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சசிதரன், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும், வேறு அமர்வு அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, ஸ்டர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வை நியமித்து தலைமை நீதிபதி தஹில் ரமானி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்