குறுவை சாகுபடி : மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கவலை...

குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் தண்ணீர் திறக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Update: 2019-06-09 05:01 GMT
திருவாரூர் மவாட்டத்தில் ஆண்டுதோறும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்படும். குறுவை சாகுபடியில் 90 சதவீதம் காவிரியில் திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தியே நடைபெறுகிறது. 10 சதவீதம் மட்டுமே, ஏரி மற்றும் கிணற்று நீர் பயன்படுத்தப்படுகிறது. 3 போகம் நெல்சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், காவிரி நீர், சரியான நேரத்திற்கு  திறக்கப்படாததால் தற்போது 1 போகமாக குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று விவசாயத்திற்கு மாறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக  விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். நெல் சாகுபடியை பாதுகாக்காவிட்டால், அரிசிக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்படும் எனவும், தண்ணீருக்காக கர்நாடகாவை மட்டுமே நம்பி இருக்காமல் மாற்று திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

பருவ மழை தொடங்க உள்ள இந்த சூழ்நிலையில் ஆறு, குளம், ஏரி மற்றும் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது. ஆண்டுதோறும் சம்பா, குறுவை சாகுபடிகளை தொடங்கும் போதும் தண்ணீருக்காக போராடி வருவது தொடர் கதையாக உள்ள நிலையில் நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளின் பிரச்சினையை சரிசெய்து, விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்