கன்னியாகுமரிக்கு வருகை தந்த நிதின் கட்கரி

கன்னியாகுமரிக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, அங்குள்ள சுற்றுலா தளங்களை கண்டுகளித்தார்.

Update: 2019-06-08 18:16 GMT
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.  அவரை தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். இதேபோல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் அவருக்கு சால்வை அணிவித்தும் பூ செண்டு வழங்கியும் வரவேற்றனர். பின்னர் நிதின் கட்கரி,  கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு தனி படகில் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர்,  திரிவேணி சங்கமம் மற்றும் விவேகானந்தர் கேந்திராவையும் சுற்றிப்பார்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்