ஜமாபந்தி கூட்டத்தில் அதிகாரிகளுக்கு போடப்பட்ட நாற்காலி : ஆக்கிரமித்த அ.தி.மு.க. நிர்வாகிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், கோட்டங்களில் நேற்று ஜமாபந்தி கூட்டம் தொடங்கியது.

Update: 2019-06-07 23:25 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்கள், கோட்டங்களில் நேற்று ஜமாபந்தி கூட்டம் தொடங்கியது. பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. சோழவரம் குறுவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்களிடம் இருந்து, குடும்ப அட்டை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை கோரல் என,  132 மனுக்கள் பெறப்பட்டன. ஜமாபந்தி கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை உடனடியாக எடுக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது அவருடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அமர்ந்து, மக்களிடம் மனுக்களை பெறுவதற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை ஆக்கிரமித்து அமர்ந்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகளின் இந்த செயல் மனு கொடுக்க வந்த பொது மக்களை முகம் சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்