கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ் : தமிழக எல்லையில் சோதனை தீவிரம்

கேரளாவில், நிபா வைரஸ் பரவி வருவதால், தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-06-07 23:20 GMT
வாளையாறு, வேலந்தாவளம், ஆனைக்கட்டி, மீனாட்சிபுரம் உள்ள 12 இடங்களில் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.  கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களில் சோதனை நடத்தும் அவர்கள், பயணிகளுக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை விசாரித்து,  அத்தகைய அறிகுறி உள்ளவர்களை, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் சுகாதாரத் துறையினர்,  நிபா வைரஸ் தாக்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்