"மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்" - திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உறுதி

சென்னை தாம்பரத்தில் திமுக சார்பாக, கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-06-06 23:26 GMT
சென்னை தாம்பரத்தில் திமுக சார்பாக, கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏர் எஸ்.ஆர். ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு,  ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ஆறு முறை தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றப் போவதாகம் கூறினார். எதிர்க் கட்சியாக இருக்கிறோம் என கூறி தப்பித்துக் கொள்ள மாட்டேன் எனவும் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்