"தொழில் வளர்ச்சி, ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-வது இடம்" : அமைச்சர் எம்.சி.சம்பத்
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் பங்கேற்றார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்ககளிடம் பேசிய அவர், தமிழகத்தில் மொத்தம் 40 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். அவற்றிற்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.