64 வருடங்கள் பழமையான காந்தி பூங்கா : பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலை
ஏற்காட்டில் உள்ள பழமையான காந்தி பூங்கா, பராமரிக்கப்படாமல் பழுதடைந்து வரும் நிலையில், பூங்காவை சீரமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் பல்வேறு சுற்றூலா தலங்கள் உள்ளன. இதில் ஒன்று 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காந்தி பூங்கா. 64 வருடங்கள் பழமையான இந்த காந்தி பூங்கா தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பராமரிப்பில்லாமல் புதர் மண்டி கிடைக்கிறது. இங்குள்ள காந்தியின் சிலை சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள மக்கள், சுதந்திர தினம் அன்று மட்டும் காந்தி பூங்காவிற்கு அரசியல் வாதிகள் வந்து மாலையிட்டு செல்வார்கள் என்றும், பிறகு பராமரிப்பின்றி கைவிடப்படுவதாவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து கூறிய மக்கள், காந்தி பூங்காவை சீரமைத்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.