இருமொழி கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது - ஆர்.எஸ்.பாரதி
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேருங்கள் என சொல்வதன் மூலம் மும்மொழிக்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேருங்கள் என சொல்வதன் மூலம் மும்மொழிக்கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி மறைமுகமாக ஆதரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா கொண்டு வந்த இருமொழிக் கொள்கைதான் திமுகவின் நிலைப்பாடு என்றும், மும்மொழிக் கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என்றும் குறிப்பிட்டார்.