"நல்லவர்களை இறைவன் சோதிப்பான் கைவிடமாட்டான்" - ஓ.பன்னீர் செல்வம்

அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Update: 2019-06-03 17:39 GMT
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் தனியரசு, தனபாலன் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், 'நல்லவர்களை இறைவன் சோதிப்பான்.  ஆனால் கைவிட மாட்டான் என்றும், ஆனால் கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான்; கடைசியில் கைவிட்டு விட்டுவிடுவான்' என ரஜினியின் 'பாட்ஷா' திரைப்பட வசனத்தை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் முடிவுகள் வந்தும், சிலர் சிரிக்க முடியாத நிலையில் இருப்பதாக கூறியதோடு, அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்