தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை தேவை - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2019-06-03 14:15 GMT
கோவையில் தேங்காய் ஓடுகளை எரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் தேங்காய் ஓடுகளை மாலையாக கோர்த்தபடி மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் 6 தேங்காய் ஓடுகள் எரித்து கரியாக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. நிலத்தை ஆழமாக தோண்டி தேங்காய் ஓடுகளை எரித்து கரியாக்கி விற்பனை செய்யும் நிறுவனங்களால் சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படுவதாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்