திருச்சி : அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளை மூட வலியுறுத்தி போராட்டம்

அங்கீகாரம் பெறாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

Update: 2019-06-03 12:26 GMT
அங்கீகாரம் பெறாமல் செயல்படும் தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூட வலியுறுத்தியும், அரசு பள்ளிகளை மேம்படுத்தி தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்