33 ஆண்டுகள் என்சிசி அலுவலராக இருந்த பேராசிரியர் ஓய்வு
புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில் 33 ஆண்டுகள் என்சிசி அலுவலராக இருந்த பேராசிரியர் ராஜரத்தினம் ஒய்வு பெற்றார்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக் கல்லூரியில் 33 ஆண்டுகள் என்சிசி அலுவலராக இருந்த பேராசிரியர் ராஜரத்தினம் ஒய்வு பெற்றார். இதையடுத்து அவரது மாணவர்களாக இருந்த போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் பலரும் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா நடத்தினர். 1998 ஆம் ஆண்டு முதல் பணி ஓய்வு பெற்ற நாள் வரை ஆயிரக்கணக்கான என்சிசி மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர் ராஜரத்தினர் பல்வேறு விருதுகளை பெற்றவர். இந்த நிலையில் இவர் பணி ஓய்வு பெறும் நிலையில் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாராட்டு விழாவை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.