பூமிக்கடியில் கேபிள் பதிக்கும் பணியால் லிட்டர் கணக்கில் வீணாகும் குடிநீர்..
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் குழாய்கள் உடைந்து, லிட்டர் கணக்கில் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் குழாய்கள் உடைந்து, லிட்டர் கணக்கில் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பாக 5 ஜி அலைக்கற்றை கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இயந்திரம் மூலம் பூமிக்கடியில் துளையிட்டபடுகிறது. இதனால் சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதோடு, அரசு தொலைத்தொடர்பு கேபிள்களும் அறுந்துபோய் சேவைகள் முடங்கியுள்ளன. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.